TNTET - தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். 


அரசுப் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வு நடத்தும் அரசாணை 149-யை ரத்து செய்ய வேண்டும், 2013, 2014, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் நியமனம் வழங்கப்படும் எனக் கூறிய வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுவரை 12 முறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் எனவே அரசு நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.