இலக்கியங்கள் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் இலக்கிய வரலாறு :

காதல், வீரம், பெருமை என பல்வேறு நிலைகளில் சிற்றிலக்கியங்களில் பாடப்பொருள் அமைந்திருப்பது இங்கு அறியலாம். சிற்றிலக்கியங்கள் 96 வகையாக பிரிக்கப் பெற்று இருந்தாலும் இவற்றில் குறிப்பிட்ட சில வகையிலேயே புலவர்களால் பெரிதும் போற்றிப் பாடப் பெறுகின்றன. பிரபந்தம் என்ற கலைச் சொல்லுக்கு இணையானது சிற்றிலக்கியம். பிள்ளைக் கவி முதல் புராணம் ஈறாக 96 என்ற பிரபந்தம் மரபில் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்மி வடிவிலும் சிற்றிலக்கியங்கள் வடிவிலும் பெரிதும் காணப்படுகின்றன.

கீழே சில சிற்றிலக்கியங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகைகள் தொல்காப்பியத்திலேயே வித்து இருப்பதாக குறிப்பிடுவார்கள். மானுட பருவத்தில் இளமைப்பருவம் இயற்கையானது.குழந்தையின் உருவமும் செயல்களும் ஐம்புலன்களால் நகரக் கூடியவை. அப்படிப்பட்ட குழந்தைப் பருவத்தை பாடுவதே பிள்ளைத்தமிழ் ஆகும்.ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாக பிள்ளைத்தமிழ் காணப்பெறுகின்றது.
பரணி என்பது போல் நிகழ்ச்சியை பாடுவதாகும். பழந்தமிழ் களவழி எனக்கூற பெறுவதில் இருந்த வளர்ச்சி பெற்ற வடிவமாகும். போர்க்காலத்தில் ஆயிரம் யானையைக் கொன்ற வீரனின் புகழை பாடுவது பரணி பரணி என்ற இலக்கிய வகை எதற்காக பயன்படுவது என்பதை பன்னிரு பாடலில் குறிப்பிடப்படுகிறது. பரணி கள்ளுக்கு சிறந்ததாக கருதப்படுவதே கலிங்கத்துபரணி ஆகும்.

ஆயிரம் யானைகளைக் கொன்ற மாபெரும் தலைவனை அடிப்படையாகக் கொண்டு கடவுள் வாழ்த்து கடை திறப்பு, பாலைநிலம், காளிகோயில், பேய்களோடு காளி, காளியோடு பேய் இவை போல மொத்தம் பதிமூன்று நிலையில் பாட பெறுவதே ஆகும்.

கலம்பகம் என்பது பல்வேறு யாப்பு உறுப்புகளை கலந்து அமைந்ததாகும். "விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" என்ற தொல்காப்பியர் கூறும் பிரிந்து என்ற வனப்பே பின்பு கலம்பக இலக்கிய வகை தோன்றியது எனக் குறிப்பர்.கலம்பகத்தில் காணப்பெறும் உறுப்புகள் அகப்பொருள் புறப்பொருள் சார்ந்தவையாக காணப்பெறுகின்றன.
ஒன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்மன் ஐ பாட்டுடைத்தலைவனாகக் கொண்டுஇயற்றப்பெற்ற நந்திக்கலம்பகம் தமிழில் எழுந்த முதல் கலம்பக நூல் என குறிப்பிடுவர்.

அந்தாதி என்பது பாடலில் ஈற்று அடி, சொல் அல்லது  அசை அடுத்த பாடலின் முதலாக வருவதாகும். அதாவது ஈற்றில் (அந்தம்) வருவது அடுத்த பாடலின் முதலாக (ஆதி) வருவதாகும். அந்தாதி ஒரே வகை யாப்பில் 100 பாக்கலை உடையது ஆகும்.பெரும்பாலும் அந்தாதி தொடக்ககாலத்தில் இறைவனைப்பற்றி பாட எழுந்தவையே ஆகும்.
கோவை என்பது அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும் தலைவன் தலைவியர் காதல் உணர்வுகளை ஒரே உடையவள் தொடர்ச்சியாக கோர்த்து வைத்தல் என்பதாகும்.

இளமையும் பெருமையும் மிக்க தலைமகன் உலா வரும் போது அவனை ஏழு பருவ பெண்டிரும் கண்டு மகிழ்வது பற்றி கூறுவதே உலா இலக்கியம் ஆகும்.தொடக்கத்தில் மன்னனுக்காக அமைந்த உலா பற்றிய செய்திகள் பிறகு இறைவன், சான்றோர் என மாற்றம் பெற்ற உலா என்னும் சிற்றிலக்கியம் வளர்ந்த நிலையை அறிய முடிகின்றன.எழுவகை பெண்டிரின் மனநிலை உலா இலக்கியங்களில் விளக்கப்படுகின்றது. இறைவன் அல்லது தலைவன் உலா வரும்போது அவர்களின் மனம் வளர்ச்சிக்கு ஏற்ப காதலை அமைகிறது.

மன்னன் அல்லது இறைவன் உலா வருவதை விளக்கும். உலா இலக்கியம் இரு நிலையில் அமைகின்றன. முதல் நிலையில் தலைவனின் குடிநெறி, மரபு, கொடை சிறப்பு, உலா புறப்பட்டு ஏற்பாடு, உலா வருதல் போன்ற செய்திகள் விளக்கப்படுகின்றன. இரண்டாவது நிலையில் ஏழு பருவ பெண்டிர் தலைவனைக் கண்டு காதல் கொள்ளும் நிலை விளக்கப்பெறும்.
பிற்காலத்தில் தூது என்னும் சிற்றிலக்கிய வகை வளர்வதற்கு தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் சான்றுகள் கிடைக்கின்றன. தலைவன்_ தலைவியர் பொருட்டாக தூது செல்வோரை தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர் என இன்னும் சிலரை தொல்காப்பியர் பட்டியலிட்டு கூறுகின்றார்.

மடல் என்பது அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கியம்.தடைகள் ஏற்படும்போது அவளை பெறுவதற்காக தலைவன் செய்யும் செயல் மடல் என கூறுகின்றார்கள்.பனம் கருக்கு மட்டையில் குதிரை வடிவம் செய்து தலைவியின் படத்தை வரைந்து அதனை எல்லோரும் அறிய வைத்து குதிரையின் மேல் அமர்ந்து தலைவன் உண்ணாநோன்பு இருப்பான். தொல்காப்பியத்தில் அன்பின் ஐந்திணையில் ஒரு துறையாக உள்ளது. சங்க இலக்கியத்திலும் மடலேறுதல் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
தொல்காப்பியர் குறிப்பிடும் சங்க இலக்கியங்களில் காணப் பெறும் மடல் செய்தியை சற்று விரிவாக முதல்முதலில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடல், சிறிய திருமடல் விளங்குகின்றன. மடல் என்பதை இன்ப மடல், வளமடல் என்னை இரு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.காதலுக்காக தோன்றிய மடல் என்னும் ஒரு துறை கடவுள், குரு என பாடுபொருள் விரிவடைவதை பிற்கால மடல் இலக்கியங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

பள்ளி என்னும் சிற்றிலக்கியம் மருத நிலத்தில் பயிர் தொழில் செய்யும் பள்ளன் அவன் மனைவியார் மூத்தபள்ளி, இளைய பள்ளி ஆகியோர் வாழ்க்கையை முதன்மையாக விளங்குகிறது. மேலும் நிலத்திற்கு உரிமையுடைய பண்ணையார், தெய்வங்கள், அங்கு நிலவும் பழக்கவழக்கங்கள் போன்றவைகளுக்கு பள்ளு இலக்கியம் விளக்கப்படுகின்றது.

பள்ளு இலக்கியத்தின் அமைப்பு முதலில் கடவுள் வாழ்த்தோடு தொடங்கும்.அடுத்து மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் இவர்கள் அறிமுகத்தோடு வரலாறு, நாட்டு வளம் போன்றவை விளக்கப் பெறும். குயில் குரல் கேட்டல், மழை வேண்டல், ஆற்றுநீர் கண்டு அதனை போற்றுதல் போன்ற செய்திகள் தொடரும்.பிறகு பண்ணையாரின் வரவும் அவரிடம் குடும்பவியல் மாற்றுதலும் அவன் புலம்பலும் தொடரும். இவ்வாறு அமைவதே பள்ளி இலக்கியமாகும்.

96 வகை சிற்றிலக்கியங்கள் குறிக்கப் பெறாத ஒரு புதுவகை சிற்றிலக்கியம் சிந்து என்பதாகும். வண்ணம் எனப்படும் கீர்த்தனையை பல்லவி, அனுபல்லவி, மூன்று கன்னிகள் சேர்ந்த சரணமாக ஐந்து உறுப்புகள் இருக்கும். பல்லவி அனுபல்லவி இல்லாமல் சிந்து பாடல்கள் அமைகின்றன. நாட்டுப்புற இசையோடு பாடப் பெற்றதாகும்.