04.03.2023 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! 

 
மார்ச் 4ஆம் தேதி நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று கொண்டாடப்பட இருப்பதால் குறிப்பிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.


அந்த வகையில் இத்தினத்தை அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்

 திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி ஆகிய 4 மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.