முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவு ஜூலையில் வெளியிடப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஜூலையில் முடிவு வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -- 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை- - 1 பதவிகளுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரியில் கணினி வழி தேர்வு நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடப்பதால், விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் முடிய, ஒரு மாதம் தேவை. அதன்பின், இறுதி விடைக்குறிப்பு வெளியாகும். பின், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் ஜூலை இறுதியில் முடிவு வெளியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள