தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் மஞ்சளின் மகிமையை பற்றி தெரிந்து கொள்வோம்.!


** நமது உடலில் உள்ள கட்டிகள், பருக்கள், தேமல் உள்ள இடங்களில் மஞ்சள் மற்றும் சந்தனத்தை அரைத்து தடவலாம்.
** நமது உணவில் தொடர்ந்து மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் மலக்குடல் மற்றும் கருப்பை சம்பந்தமான புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியும்.
** முகத்திற்குப் பூசும் மஞ்சள் வியர்வை சுரப்பிகளை தூண்டுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள அழுக்கை வெளியேற்றுகிறது.
** மஞ்சளுடன் கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு போன்றவற்றை அரைத்து பச்சை பயிறு மாவு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்துவர  சருமம் பொலிவுடன் காணப்படும் .
**மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.