பித்த வெடிப்பை சரி செய்ய எளிய முறையில் இயற்கை வைத்தியம்.!!


* காலில் அழுக்கு மற்றும் ஈரத்தில் இருந்து பாதுகாக்க  காலணி அணிய வேண்டும் இதன் மூலம் பாதவெடிப்பு பெரிதாக செல்லாமல் தடுக்கலாம்.


* வெளியில் சென்று வரும் பொழுது பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவலாம்


* இரவு உறங்கச் செல்லும் முன் பாதங்களை சுத்தம் செய்து கிரீம்தடவுவதன் மூலம் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும்


* பித்தவெடிப்பு உள்ளவர்கள் மிதமான தண்ணீரில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கால்களை சிறிது நேரம் அதில் வைத்திருக்க வேண்டும் பின் கால்களை ஸ்கிரப் கொண்டு தேய்த்து டெட் செல்களை நீக்கலாம்.


* பித்த வெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலைகளை தேய்த்து விடலாம்.


* விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவில் எடுத்து மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்துக் கொள்ளலாம்.


* மிளகுடன் சமஅளவு கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து குழைத்துக் கொள்ளவும் அதை குதிகால்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தடவி அதன் மீது லேசான துணி போட்டு பாதுகாக்கலாம்.


 இரவில் தூங்க போகும் முன் இவ்வாறு செய்தால் பித்த வெடிப்பு குணமாகும்.