ஜனவரி 3 முதல் தினமும் வகுப்பு நடக்குமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.


 தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தினமும் வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை பிறகு முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.


 நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.


 தமிழகத்தில் ஒமைக்கிரான் பரவி வரும் சூழலில் பள்ளிகளில் தினமும் வகுப்பு நடத்தும்  முடிவு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சரை கேட்டபொழுது அவர் பதில்; 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு பற்றி கடந்த 4 நாட்களுக்கு முன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது பள்ளி கல்வித்துறை பற்றியும் பேசப்பட்டது.
 இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் சுழற்சி முறையில் வழக்கம்போல் முழுவதுமாக ஜனவரி 3ஆம் தேதிக்கு  திறக்கலாம் எனவும் பேசப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஒமைக்ரான் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதும் அவரிடம் பேசினேன்.
 அவர் 25ஆம் தேதி மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறும் அதில் இது குறித்து முதல்வரிடம் கலந்து பேசுவோம் என்றும் தெரிவித்துள்ளார் .
 எனவே 25ஆம் தேதிக்கு பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு தினமும் வகுப்பு எடுப்பது பற்றி முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.