டிச., 18, 19ல் அரசு ஊழியர்கள் மாநில மாநாடு மதுரையில் மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது:பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும்.


சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது. டிசம்பர் 19ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.