தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை.
அடுத்த 3 நாட்களுக்கு "ஆரஞ்சு அலர்ட்" இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் "ஆரஞ்சு அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு "ஆரஞ்சு அலார்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்:
சென்னை
தஞ்சை
திருவாரூர்
மயிலாடுதுறை
நாகை
புதுக்கோட்டை
கன்னியாகுமரி
நெல்லை
தூத்துக்குடி
மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment