10 &12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு  தேர்வு நடைபெறுமா? பள்ளி மாணவியின் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதில்.! 


உலக பெண் குழந்தைகள் தின விழா திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

 அப்போது ஒரு மாணவி பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ்  என்று போடப்பட்டுள்ளது. இதனால் எங்களின் உயர் கல்விபடிப்பிற்கு பாதிப்பு வருமா?என்று கேள்வி எழுப்பினார்.

உலக நாடுகளை கொரோனா அச்சுருத்தி வந்த நிலையில் மாணவர்களின் நலன்கருதி பொதுத்தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் மற்றொரு மாணவி 10 &12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வும்  அதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் முழு ஆண்டுபொதுத் தேர்வும்நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் முதலமைச்சரின் அனுமதி பெற்ற பிறகே இதற்கான சுற்றறிக்கை கல்வி அதிகாரிகளுக்கு  அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும்  அரசு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண் பெற்றால் அவர்களின் மேற்படிப்பு கல்வி செலவை அனைத்தும் தமிழக முதல்வர் அவர்களை ஏற்றுக்கொள்வார்.

 எனவே மாணவர்கள் அனைவரும் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.