இன்றுடன் நிறைவு பெற்றது பாரா ஒலிம்பிக் போட்டி .பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது? இந்தியாவின் இடம் என்ன? 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டி  இன்றுடன் நிறைவடைந்தது. இந்திய நேரப்படி இன்று மாலை கலை நிகழ்ச்சிகளுடன் பரா ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா முடிந்தது. இந்திய அணி சார்பில் இரண்டு பதக்கங்களை வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா  தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றார் .

இந்த ஒலிம்பிக் போட்டியில்  இந்திய வரலாற்றில் முதல் முறையாக மொத்தம் 19 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 24 ஆம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. பதக்கப் பட்டியலில் 5 தங்கம் 8 வெள்ளி,6 வெண்கலப் பதக்கங்களை பெற்று இந்தியா 24 ஆம்  இடத்தைப் பிடித்துள்ளது .

*பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சைனா 207 பதக்கங்களுடன் உள்ளது. 

*இரண்டாமிடம் கிரேட் பிரிட்டன் நாடுகளின் கூட்டமைப்பு 124 பதக்கங்களை பெற்று உள்ளது.

* அமெரிக்கா 104 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது .