சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை.!

தமிழகத்தில் கடந்த 2009 &2010ம் ஆண்டுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இன்னும் பணி நியமனம் வழங்கப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 1,258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் .ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 இந்த அறிக்கையில் கடந்த திமுக ஆட்சியின்போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு மூப்பு முறையில் நடைபெற்று வந்தது 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணியை முடித்துவிட்ட 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,258 பட்டதாரி தமிழாசிரியர்கள் இன்னும் பணி நியமனம் செய்யப்படவில்லை. பின்னர் அதிமுக அரசு ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித் தேர்வு முறையை நடைமுறைப்படுத்தியது. ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து தங்களுக்கு விளக்கு பெற்றனர்.

இருப்பினும் இதனை ஆண்டுகளாக அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது குறித்து அரசு அறிவிக்கவில்லை இதனால் அவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், பணி நியமன ஆணை வழங்கி அவர்களுக்கு உதவி செய்திட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.