"எங்களுக்கு பல் வளரல" நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கும் , முதல்வருக்கும் கடிதம் எழுதிய சிறுவர்கள்..!!
மாநில முதல்வர் மற்றும் பிரதமருக்கு வித்தியாசமான கடிதத்தை எழுதிய சிறுவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். அப்படி என்ன கடிதம் எழுதினார்கள் தெரிந்துகொள்ளலாம்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தங்களின் பற்கள் வளர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளது கலகலப்பை உண்டாக்கி உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரிஸ்வான் 6 வயது மற்றும் ஆரியன் 5 வயதுஇவர்களுக்கு மேலே முன் வளராமல் உள்ளதால் இதனால் சுவையான உணவுகளை உண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடிதம் எழுதி உள்ளார்கள்.
அண்ணன் ரிஸ்வான் எழுதிய கடிதம் :
அசாம் மாநில முதல்வர் ஹிமந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அன்புள்ள ஹிமந்தா அங்கிள் எனக்கு ஐந்து பர்கள் வளரவில்லை இதனால் எனக்கு பிடித்த உணவுகளை உண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார் .
தம்பி எழுதிய கடிதம்:
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் .
அதில் அன்புள்ள மோடி ஜி எனக்கு மூன்று பற்கள் வளரவில்லை அதனால் பிடித்தமான உணவுகளை சாப்பிடுவது சிரமமாக இருக்கிறது இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடிஜி என்று இவர் எழுதியுள்ளார்.
இந்த கடிதங்களை சிறுவர்களின் மாமா முகநூலில் பதிவிட்டுள்ளார் .இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.இது போன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ்ச் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.
0 Comments
Post a Comment