முதல்வரின் தனிப்பிரிவில் வெள்ளைத்தாளில் மனு அளித்தால் போதும் .அரசு அறிவிப்பு!

 முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில்தான் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்குஅளிக்கப்பட வேண்டும் என்ற தவறான செய்தி மக்களிடையே சில தனிப்பட்ட நபர்களால் பரப்பப்பட்டு வருவதாகவும் பெரும்பாலான பொதுமக்கள் குறிப்பிட்ட பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாகவும் செய்திகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்க  எவ்வித குறிப்பிடப்பட  படிவமும் அரசால் 
  பரிந்துரைக்கப்படவில்லைஎன  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இந்த மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வெள்ளை தாளில் எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது எனவும் தபால்/ இணையதளம் www.cmcell.tn.gov.in / முதலமைச்சர்  உதவி மையம் cmhelpline.tnega.org /  பெறப்படும் அணைத்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.