தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்.

 தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் +2 வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு  பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு வகுப்புகள் மாலை 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

 இதற்கிடையில் பள்ளிகள் திறந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை உட்பட நகர்ப்புறங்களில் இயங்கும் பள்ளிகள்  காலை8.30 மணி முதல் மாலை 3 .30மணி வரை மட்டும் செயல்பட வேண்டும் என்றும், மற்ற பகுதியில் உள்ள பள்ளிகள் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையிலும் செயல்பட வேண்டும் என்ற புதிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்  பிறப்பித்துள்ளார்.