பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியில் மாற்றம் -  முழு விவரம்.


 தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த மாதம் 25ஆம் தேதி பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

 செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடுவதாக இருந்த ரேங்க் பட்டியல் 14ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
 7 - ம் தேதி நடத்தப்படுவதாக இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு 17-ஆம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் 14 ஆம் தேதி நடத்துவதாக இருந்த பொது கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் துணை கலந்தாய்வு 19 ஆம் தேதியும் ,அருந்ததியினர் மற்றும் பட்டியல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கலந்தாய்வு நடைமுறைகள் அக்டோபர் 25-ஆம் தேதி நிறைவடையும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ்செய்தி  வலைதளத்துடன்  இணைந்திருங்கள் நன்றி.