BE - பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு.


BE - பொறியியல் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. 

பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டைவிட 11,284 இடங்கள் இந்த ஆண்டு குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து முதல் கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு பிரிவு கலந்தாய்வு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த பொறியியல் கலந்தாய்வில் 440 கல்லூரிகள் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன. அதன்படி ஒரு லட்சத்து 51ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளன .

கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கிடைத்தன. இதனால் கடந்த ஆண்டை விட தற்போது 11,284 இடங்கள் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.