7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் BE படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணம் முழுவதும் அரசே ஏற்கும் - தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு! 

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தொழில் கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அந்த மாணவர்களின் 

கல்வி கட்டணம்

 விடுதிக் கட்டணம்

 கலந்தாய்வு கட்டணம்

 ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பதினோராயிரம் ஏழை மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முக.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்