அக்டோபர் 4ஆம் தேதி முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு. 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

 அனைத்து வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது.

 இதனால் அக்டோபர் 4ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொலி பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முறையான  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 தகுதிவாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

 மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ் செய்திவளைத்தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.