தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 ஆசிரியர்கள் தேர்வு - முழு விவரம்.


 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 385 ஆசிரியர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 அந்த விழாவில் தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு  டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளி பதக்கம் ஆகியவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்தவகையில் இந்த இந்த கல்வி ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே நியமித்திருந்தது.

 *தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளில்  171ஆசிரியர்கள் *உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  171 ஆசிரியர்கள் 

*மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 37பேர்

* ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர்

* சமூக பாதுகாப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள் 2 பேர்

* மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 385 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

 இந்தப் பட்டியல் அனைத்தும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  நல்லாசிரியர் விருதுகள் 5 ஆசிரியர்களுக்கு மட்டும் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்க உள்ளார்.

 எஞ்சிய மற்ற ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மக்களவை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓரிரு நாட்களில் விருதுகள் வழங்குவார்கள்.

 இது குறித்து கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:

 இதுவரை இல்லாத அளவுக்கு நிகழாண்டு இளைய தலைமுறை ஆசிரியர்கள் அதிக அளவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 புதுமையான கற்பித்தல், கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல், பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், மாணவர் சேர்க்கை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.