ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு. இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ. 3000 உதவித்தொகை வழங்கப்படும். தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!


 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. மூன்றாண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர வரும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதில் தேர்வாகும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு ,இலவச இருப்பிடம், உடை அனைத்தும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 மேலும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது.