போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த 2 ஆசிரியர்கள் பணி நீக்கம். 

நமது தமிழ் செய்தி வலைதளத்திற்கு கிடைத்த தகவல்கள்:

 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பனையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் வசந்தகுமார் இவரும் வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் சௌந்தரராஜன் இந்த இரண்டு ஆசிரியர்களும் கலந்து 2015ஆம் ஆண்டு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து  கல்வி சான்றிதழ் உண்மை தன்மை அறிய சென்னையில் உள்ள கல்வி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அவர்களின் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டது. இருவரின் சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்டதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வசந்தகுமார், சௌந்தரராஜன் ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

 இதையடுத்து தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் உரிய விசாரணை நடத்தி 2 ஆசிரியர்களும் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கி நேற்று  உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இரண்டு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி போலீசில் புகார் அளித்து  தொடர்ந்து அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அரசிடம் ஏமாற்றிய சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.