தமிழகத்தில் + 2 துணை தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகலை அக்டோபர் 1ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுத்துறை அறிவிப்பு.!

தேர்வுத்  துறை இயக்குனர்சா.சேதுராம வர்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:

 தனித்தேர்வர்களாக  +2 துணைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 6 தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது.
 இதற்கான முடிவுகள் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டன.
 விடைத்தாள் நகல் கோரி தனித்தேர்வர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை www.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வுத் துறையின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இரண்டு நகல்கள் எடுத்து அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும்.

 ஒவ்வொரு பாடத்துக்கும் விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீட்டுக்கு ரூ. 505 செலுத்தவேண்டும் .
மறு கூட்டலுக்கு ரூ.205 செலுத்த வெண்டும்.

 உயிரியல் பாடத்தில் மட்டும் மறுகூட்டலுக்கு ரூ. 305 கட்டணமாக செலுத்த வேண்டும்.
 முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர் சா.சேது ராமவர்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.