தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்  வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் (10 . 10 . 2021) கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை தொழில் பழகுநருக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து மண்டல பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு 2019 ,2020 ,2021 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடம் இருந்து ஓராண்டு தொழில் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 விண்ணப்பங்களை htt://boat- boat-srp.com என்ற இணைய வழி மூலமாக  அடுத்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.