தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.!
தமிழகத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் அடுத்த கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் .
இந்த ஆலோசனை கூட்டத்தில்1 முதல்8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது வார இறுதி நாட்களில் கோயில்கள் மூடப்பட்டு இருப்பதில் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். கொரௌனா தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
Post a Comment