தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை.

 தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.  இது குறித்து ஏற்கனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கலந்து ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டதாகவும் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் கலவையான கருத்துகள் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில்

 மருத்துவத் துறை

 பள்ளிக் கல்வித் துறை

 வருவாய்த்துறை

 ஊரக வளர்ச்சித் துறை

 நகராட்சி நிர்வாகம்

 உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் இன்று பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் முடிவு முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.