RTE மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு- முழுவிபரம்.


 தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை மேலும் பத்து நாட்களுக்கு நீட்டித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்டத்தின் படி 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கைக்கான ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி முதல் தொடங்கியது.

 மொத்தமுள்ள 1.13 லட்சம் இடங்களுக்கு தொடங்கப்பட்ட ஆன்லைன் பதிவானது இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதுவரை 70 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ள நிலையில் எஞ்சிய 43 ஆயிரம் இடங்களை நிரப்ப கூடுதலாக பத்து நாட்கள் தேவை என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி கடிதம் எழுதி வலியுறுத்தியிருந்தார். இன்றுடன் முடிவடையவிருந்த ஆன்லைன் பதிவு வரும் மே மாதம் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் கோரிக்கையை ஏற்று கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ்ச் செய்தி வளைத்தளத்துடன்  இணைந்திருங்கள்.