7,979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு -  முழுவிபரம்.


பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக அரசுப்பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புக்கு பாடம் நடத்த ஏதுவாக, அனைவருக்கும்கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2006-ம் ஆண்டு 7,979 பட்டதாரி ஆசிரி யர் பணியிடங்கள் புதிதாக தோற் றுவிக்கப்பட்டன. இவர்களுக் கான பணிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிந்துவிட்டது. இதையடுத்து, இந்த பணி யிடங்களுக்கு மேலும் 3 ஆண்டு கள் வரை (2021-24) தொடர் நீட் டிப்பு வழங்குமாறு அரசுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் கருத் துரு அனுப்பியிருந்தார். அதை பரிசீலனை செய்து, 7,979 பட்ட தாரி ஆசிரியர் பணியிடங் களுக்கு 2024 மார்ச் 31-ம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு ஆணை யிடுகிறது.