தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! எந்த மாவட்டங்கள் தெரிந்துகொள்வோம்.!


 தமிழகத்தில்  கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

 இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் :

சேலம்

 திருவண்ணாமலை

 வேலூர் 

ராணிப்பேட்டை

 இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான அதுவரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

நாளை மழை பெய்யும் மா வட்டங்கள்;

 திருவள்ளூர்

 காஞ்சிபுரம்

 ராணிப்பேட்டை 

இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

 வருகிற 26-ஆம் தேதி:

 திருவண்ணாமலை

 விழுப்புரம்

 கள்ளக்குறிச்சி 

சேலம்

 இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் 

வரும் 27 மற்றும் 28 தேதிகளில்:

 நீலகிரி

 கோவை

 தேனி

 திண்டுக்கல்

 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னை நிலவரம்:

 சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மீனவர்களுக்கான எச்சரிக்கை:

 இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே  60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.