தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் 4000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.!


 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 4000 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து 14 வழித்தடங்களில் 8 நகரப் பேருந்துகள் உட்பட 12 பேருந்துகளின்  சேவையை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

 தமிழகம் முழுவதும் மினி பஸ்கள் படிப்படியாக இயக்கப்படும் என்றும் புதிய பேருந்துகளை ஜெர்மனியிலிருந்து வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நான்காயிரம் பேர் பற்றாக்குறையாக  உள்ளதாகவும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தவுடன் முதல்வரிடம் கலந்து ஆலோசித்து ஓட்டுனர், நடத்துனர் களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.