கூட்டுறவுத் துறையில் 4,000 : பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி.


கூட்டுறவுத் துறையில் உள்ள 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் வெளிப் படைத் தன்மையோடு விரைவில் நிரப்பப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். 


திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூரில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலை வகித்தார். கூட்டுறவுத் துறை  திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது: 



மக்களைத் தேடி மருத்து வம் என்ற திட்டத்தால் கோடிக் கணக்கான மக்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட உள்ளது. வீடு தேடிச் சென்று மருத்துவம் எப்படி வழங்கப்படுகிறதோ, அதேபோல் வீடு தேடிச் சென்று வேலை வாய்ப் பும் வழங்கப்படும். 


கூட்டுறவுத் துறையில் உள்ள 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையோடு விரைவில் நிரப்பப்பட்டு, இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். கூட்டுறவு கடன் சங்கங்களில் அனைவரும் உறுப் பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களின் தேவைக்கு ஏற்ப கடன் வழங்கப்படும் என்றார்.