தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வான தஞ்சை மாநகராட்சிக்குரூ. 25 லட்சம்  பரிசுத் தொகை அறிவிப்பு. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.! 


தமிழகத்தின் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த உள்ளாட்சி நிர்வாகங்களை தேர்வு செய்து முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.

 அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று தஞ்சை மாநகராட்சிக்கு விருது உடன் ரூ.25 லட்சம் பரிசுத் தொகையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்க உள்ளார். 

சிறந்த நகராட்சிகளில்

 *உதகை  நகராட்சி முதலிடத்தை  பிடித்துள்ளது.

* இரண்டாமிடம்  நகராட்சிதிருச்செங்கோடு

* மூன்றாமிடம்  சின்னமனூர் நகராட்சி இடம்பெற்றுள்ளன.

 இந்த நகராட்சிகளுக்கு முறையே

 ரூ.15 லட்சம்

 ரூ.10 லட்சம்

ரூ. 5 லட்சம்

 என பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

 சிறந்த பேரூராட்சியாக

* முதலிடத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கள்ளக்குடி பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

* இரண்டாமிடம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியும்

* மூன்றாம் இடத்தை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டையூர் பேரூராட்சி இடம்பெற்றுள்ள .

இந்த பேரூராட்சிகளுக்கு முறையே ரூ.10 லட்சம்

ரூ. 5 லட்சம்

ரூ. 3 லட்சம் என பரிசுகள் சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்பட உள்ளது.