லிம்ரா சார்பில் நீட் தேர்வு எழுதுவோருக்கு மாதிரி தேர்வு: ஆக. 25, 31-ம் தேதிகளில் இலவசமாக பங்கேற்கலாம்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுவரும் செப்.12-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. நீட் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கட்டணமின்றி கூடுதல்உதவிகளை வழங்க சென்னைலிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதுகுறித்து லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி கூறியதாவது:
“மருத்துவக் கல்வி சேவையில் கடந்த 19 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் லிம்ரா நிறுவனம், ஆண்டுதோறும் நீட்தேர்வுக்கான மாதிரி வினாக்களை கட்டணம் எதுவுமின்றி வழங்கி வருகிறது. புகழ்பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கி வருகிறது.
மாதிரித் தேர்வுகளை நடத்த, போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் கேரியர் பாய்ன்ட் நிறுவனத்துடன் லிம்ராஒப்பந்தம் மேற்கொண்டு, அத்தேர்வுகளைத் தமிழகமெங்கும் நடத்தும் உரிமை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 25, 31 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு 2 மாதிரித் தேர்வுகளை எழுதலாம்.
ஒவ்வொரு தேர்வும் நீட் தேர்வு போலவே 3 மணி நேரம் ஆன்லைனில் நடத்தப்படும். வழக்கமாக ரூ.400 கட்டணம் செலுத்த வேண்டிய இந்த தேர்வுகளில் கலந்துகொள்ள கேரியர் பாய்ன்ட் ரூ.25 மட்டுமே வசூலிக்கிறது. ஆனால், லிம்ரா நிறுவனம் வழியாகச் சென்றால், தேர்வுக்கான பணத்தை லிம்ரா நிறுவனமே செலுத்தி விடுவதால், தமிழக லிம்ரா மாணவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது.
சென்ற ஆண்டு இதேபோல கேரியர் பாய்ன்ட் நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 72 சதவீதம் நீட் தேர்வில் இடம் பெற்றன. பெரும்பாலான கேரியர் பாய்ன்ட் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று பயின்று வருகின்றனர்.
இந்த முறை நீட் தேர்வு வினாத்தாளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அதற்கேற்ற வகையில் பேராசிரியர்கள் கவனம் எடுத்து மாதிரி வினாக்களைத் தயாரித்து வழங்கியுள்ளனர். தொடர்ந்து லிம்ரா குறிப்பிடும் நாட்களில் ஆன்லைன் மூலம்மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் மாணவர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் பெறாமல் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இவற்றைப் பெறுவதற்கு 9952922333 / 9444615363 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
1 Comments
😊thanks.. 👍
ReplyDeletePost a Comment