தமிழகத்தில் 2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு. 

 தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் 2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொள்கை விளக்க குறிப்பில் உரையாற்றினர். அப்போது பேசிய அவர்,

 தேசிய மாணவர் சேர்க்கை வீதம் 27.1 சதவீதமாக உள்ளதாகவும் தமிழகத்தின் தற்போதைய மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 51.4 விழுக்காடு எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதனால் உயர்கல்வியை மாறிவரும் சூழல் தற்போது ஏற்பட்டு வருவதாகவும் அதற்கேற்றாற் போல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறை மற்றும் பாட அறிவை புதுவிதமாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 மாணவர்களுக்கு இந்த காலகட்டத்திற்கு ஏற்ப படிப்பை வழங்க அவர்கள் புதுவித தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் ஆசிரியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.