விடுதலை நாள் விழா - மாணவர்களுக்கான இணையவழிக் கவிதைப்போட்டி - 2021


அன்பிற்கினிய அரசுப்பள்ளி மாணவர்களே! ஆசிரியர் பெருமக்களே!
 எதிர்வரும் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடும் 75 ஆம் ஆண்டு விடுதலை நாள் விழாவை முன்னிட்டு மகிழ்வித்து மகிழ் இயக்கம் மாநில அளவில் நடத்தப்படும் இணையவழிக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வெல்லுங்கள்! மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்!

தலைப்பு:

1.சுதந்திர காற்றே என் சுவாச காற்று!

 2. என் பெயர் தமிழன்! என் நாடு இந்தியா!

3. எது ஆனந்த விடுதலை?

கலந்து கொள்ள தகுதியானவர்கள்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு முடிய உள்ள மாணவ மாணவியர் மட்டும்.

பரிசுத் தொகை : 
முதல் பரிசு ரூ.500 
இரண்டாம் பரிசு ரூ 300 
மூன்றாம் பரிசு ரூ 200

கடைசி நாள் : 14.08.2021

விதிமுறைகள்:

1.ஒருவருக்கு ஒரு தலைப்பு மட்டுமே.
2.கூகுள் படிவத்தில் மட்டுமே கவிதையை அனுப்பிவைக்க வேண்டும்.
3.கவிதை சொந்தமாக எழுதப்பட வேண்டும். பிறர் எழுதித் தருவது ஏற்கப்பட மாட்டாது.
4.கவிதை அதிகபட்சமாக 20 வரிகள் மட்டுமே கொண்டிருக்கலாம்.
5.தங்களது கவிதையை Document, PDF, Image என ஏதேனும் ஒரு வடிவில் 1 MB அளவுக்குள் பதிவேற்றம் செய்து போட்டிக்கு விரைந்து அனுப்பி வைக்கவும்.
 
தொடர்புக்கு:

9442965431 & 7010303298

கீழ்க்கண்ட படிவம் மூலம் போட்டியில் பங்கேற்று பரிசும் சான்றிதழும் பெறுங்கள்!


அழைப்பின் மகிழ்வில்...
எழுத்தாளர் மணி கணேசன்