CPS ரத்து - 25% பென்சனுடன் பழைய ஓய்வூதியத்திட்டம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?


கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி  பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் கோரிக்கைக்கு உரிய மரியாதை வழங்கி நிபுணர் குழு அமைத்தார். அந்தக்குழுவும் காலம்கடத்தும் பணியை மட்டுமே செய்து வந்ததாக விமர்சனமும் எழுந்தது.  

 

அதனைத்தொடர்ந்து வந்த அதிமுக அரசும் சசிகலாவின் ஆசியால் முதல்வரான முன்னாள் முதல்வர் பழனிச்சாமியும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.  அது போதாது என பென்சன் கேட்கிறார்கள் என நாகரிகமற்ற வார்த்தைகளால் காயப்படுத்தியதோடு நடவடிக்கை எடுத்து தேர்தல் யுக்தியாக பொய்ப் பிரச்சாரமாகவும் அதனைப் பயன்படுத்தியது.  


  அப்போதைய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் அரசூழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.  முக்கியமாக பழைய ஓய்வூதியத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தது.

   

   கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றிபெற்றது.  அதில் அரசூழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டது.


    தற்போது  CPS ரத்து குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில்  . தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலக உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் கிசுகிசுக்கப்பட்ட  தகவல் படி  தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் அதிகாரப்பூர்வமாக நடைபெறுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.


      தற்போது நடைமுறையில் உள்ள  பழைய ஓய்வூதிய திட்டத்தில்  பணி ஓய்வுக்குப்பின் இறுதி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது  .


       ஆனால்  தற்போது  ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 25% ஓய்வூதியம் வழங்கவும்.  முன்பணம் பெறும் காலவரம்பை நீட்டிக்கவும்,   அதற்குமுன்  பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஒருகுழு  அமைக்கவும் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.       


வரும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.