மாணவர் சேர்க்கை பதிவு சார்ந்து புதிய அறிவுரைகள் - CEO Proceedings 


ceo%2Bproc%2B2

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்ளின் செயல்முறைகள் ந.க.எண்.1789/41/ 2021

நாள். .06.2021


பொருள் தொடக்கக்கல்வி - பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை - 2021 -2022 - ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி தொடக்கப்பள்ளிகள்/ நிதியுதவி தொடக்கப்பள்ளிகள்/நடுநிலைப்பள்ளிகள் - 1 மற்றும் 6 - ஆம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விவரம்/ EMIS -இணையதளத்தில் இந்நாள் வரையில் பதிவு செய்யப்படாத பள்ளிகள் உடன் (இன்று மாலைக்குள்) 01.07.2021 பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் - சார்பாக.


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தொடக்கப்பள்ளிகள்! நிதியுதவி தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் 2021 -2022 - ஆம் கல்வி ஆண்டில் 1 மற்றும் 6ஆம் வகுப்பு / ஏனைய வகுப்புகளில் இந்நாள் வரையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS - இணையதளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பின் இன்று மாலைக்குள் (01.07.2021) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கலாகிறது.


சென்ற ஆண்டு ஒவ்வொரு பள்ளியிலும் வகுப்பு வாரியாக (1 , 6 - ஆம் வகுப்பு) மற்றும் ஏனைய சேர்க்கை மேற்கொள்ளப்பட்ட எண்ணிக்கையுடன் இவ்வாண்டு (2021-2022) சேர்க்கை செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது சேர்க்கயானது மிக குறைவாக உள்ளது என தெரியவருகிறது.



எனவே இதில் வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையில் முழு கவனத்தை செலுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கலாகிறது.


இதுவரையிலும் 1 மற்றும் 6-ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்கையே நடத்தாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள குடியிருப்பில் உள்ள பெற்றோர்களை அனுகியும் சேர்க்கைக்கு தகுதியுடைய எந்த ஒரு மாணவரும் விடுபடாமல் சேர்க்கை நடத்த தெரிவிக்கலாகிறது. மேலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு தவறாமல் வருகைபுரிந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தெரிவிக்கலாகிறது.


வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஒன்றியங்களில் உள்ள தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் இன்றைய நிலவரப்படி மாணவர்கள் சேர்க்கை விவரத்தையும் EMIS இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விபரத்தையும் பள்ளி வாரியாக தனி தனி படிவத்தில் 02.07.2021 மாலை 03.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலத்தில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது.


முதன்மைக்கல்வி அலுவலர்

திருப்பத்தூர் மாவட்டம்

பெறுநர் வட்டாரக்கல்வி அலுவலர்கள், அனைத்து ஒன்றியங்கள், திருப்பத்தூர் மாவட்டம்.