மாணவர் சேர்க்கைக்காக அவ்வை வேடத்தில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியை குவியும் பாராட்டுக்கள்..! 

புதுக்கோட்டையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அவ்வை வேடமணிந்து ஆசிரியை ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்காத நிலையில் இணையவழியில் வாட்ஸ் அப், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர் ஒருவர் யுனைஸ்ரீ கிறிஸ்டி ஜோதி என்பவர் மாணவர்கள் பள்ளியில் சேர்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவ்வை  வேடமணிந்து வண்டிபேட்டை பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு நெல்லிக்கனி வழங்கி மாணவர்களை பள்ளியில் சேர வலியுறுத்தினார். வித்தியாசமான விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.