பட்டுக்கோட்டை மாவட்டம் தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த காவலர் ராஜகண்ணனுக்கு பிரதமரின் உயிர்காக்கும் விருது அறிவிப்பு.!!


 பட்டுக்கோட்டை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜ கண்ணன் என்ற காவலருக்கு பிரதமரின் உயிர்காக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆற்றில் விழுந்த ஒருவரை காப்பாற்றியதற்காக காவலர் ராஜகண்ணனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் உயிர்காக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


 விருதைப் பற்றி காவலர்  கூறியதாவது:


 நாடு முழுவதும் மொத்தம் 14 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு இந்த விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக காரணம் அவர் தெரிவித்துள்ளார். ஆயுதப் படையில் பணியாற்றிய இவர் அப்போதைய தஞ்சை மாவட்ட எஸ்பி தர்மராஜ்க்கு பாதுகாவலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி கல்லணை கால்வாயில் 29 வயதான ராஜகுமார் என்ற இளைஞர் தவறி விழுந்து விட்டார். அந்த வழியாகச் சென்ற காவலர் ராஜ கண்ணன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாக ஆற்றில் குதித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அந்த  இளைஞரை உயிருடன் மீட்டு எடுத்தார். இதற்காக இவருக்கு பிரதமரின் உயிர் காக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வலைத்தளத்துடன் இனைந்திருங்கள் நன்றி.