இனி ரேஷன் கடைகளில் புகார் தெரிவிக்க பதிவேடு. கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!


 தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நுகர்வோர் புகார்களை தெரிவிக்க பதிவேடுகள் பராமரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர்  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் செயல்படும்  ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் பொருட்கள் தரமற்றதாக வழங்குவதாகவும் பெரும்பாலான ரேஷன் கடையில் சரியான நேரத்தில் கடைகள் திறப்பதில்லை என்றும் பொதுமக்களிடம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதில் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதில் பல்வேறு சிரமங்கள்  இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.எனவே புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க பதிவேடுகள் வைத்து பராமரிக்க வேண்டும் வேண்டும் என்று கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அதை கண்காணிக்கவேண்டும் கூடுதல் செயலாளர் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச்செய்தி வளைத்தளத்துடன் இனைந்திருங்கள்.
நன்றி