நாளை யார் யாருக்கெல்லாம் கல்லூரி திறப்பு?

 

 
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொது முடக்கம் நாளை அதாவது ஜூலை 5ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இதனை அடுத்து தமிழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை தொடர்புடைய கல்லூரிகள் பல்கலைகளில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வரும் இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார் .அரசு அறிவித்த தளர்வுகளின்படி பொது போக்குவரத்து

 கோவில்கள்
 கல்லூரிகள்

 ஆகியவை தமிழகம் முழுவதும் நாளை ஜூலை 5-ஆம் தேதி முதல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 எந்த மாணவர்களுக்கு கல்லூரி இயங்கும் என தெரிந்துகொள்ளலாம்:


 எஸ். ஆர். எ ஃப் , ஜே.ஆர்.எஃப்,  எம். பில்.பி.எச். டி., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது .மற்ற மாணவர்களுக்கு கல்லூரி பல்கலைக்கழகங்கள் வர அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்தி வலைத் தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி.