டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேதி அறிவிப்பு ..! 


மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-II பதவிக்கான நேர்முகத் தேர்வானது வருகின்ற ஜூலை 19 ஆம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீண்ட கலாமாக காலியாக இருந்த 112 இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு 2018 ஜூன் 6-ம் தேதி நடந்தது. 2018 ஜூலை 15-ல் தேர்வு முடிவுகள் வெளியானது. 1,328 பேர் எழுதியதில் 33 பேர் மட்டும் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,33 பேர் மட்டும் தேர்வானதில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள்.வழக்கை விசாரித்த நீதிமன்றம்,33 பேர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து, தகுதியான நபர்களை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்று 2020 ஆகஸ்ட் 18-ல் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து,ஏற்கனவே தேர்வு எழுதியவர்களில் இருந்து 226 பேரை டி.என்.பி.எஸ்.சி தேர்வு செய்தது.இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில்,08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-II, 2013-2018 பதவிக்கான நேர்முகத் தேர்வானது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில்,226 பேருக்கான நேர்முகத் தேர்வு ஜூலை 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை (21.07.2021 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்றும் அதற்கான நேரம் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் https://www.tnpsc.gov.in/ என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.