3- ஆண்டுகளில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு குவியும் பாராட்டுக்கள் ஏன் தெரியுமா.?


 தமிழகத்திலேயே முதன்முறையாக மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி சப்ஸ்கிரைப்  பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


 தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியதம்பி மற்றும் 5 இளைஞர்களும் அவருடன் சேர்ந்து சமையல் செய்யும் யூடியூப் சேனல் ஒன்றை கடந்த 2018 -ஆம் ஆண்டு தொடங்கினார்கள். அவர்களுடைய  சேனல் இவ்வளவு வளர்ச்சி அடைய காரணம் என்னவென்றால் அவர்களின் நகைச்சுவையான பேச்சும், பாரம்பரிய கிராமத்து சமையல், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெற்ற முதல் யூடியூப் சேனல் என்ற பெருமையை பெற்றது.

 இந்த யூடியூப் சேனலுக்கு டைமண்ட் கேடயம் பெற்றுள்ளது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்தது  அவர்களுடன் உணவு அருந்தியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெற்று சாதனை படைத்திருக்கும் இந்த வில்லேஜ் குக்கிங் சேனலைச் சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக இந்த யூடியூப் சேனலில் இருந்து பெற்ற வருமானத்தில் 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்து உள்ளார்கள்.