2008 - 2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணியினை முறைப்படுத்தி ஆணை வெளியீடு.
2008 - 2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு 05.01.2009 நாளிட்ட பள்ளிக் கல்வி இயக்ககச் செயல்முறைகள் மூலம் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு ( 10+2+3 முறையில் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மற்றும் பட்டப்படிப்பு சார்ந்த பாடத்திற்கு இணையானதாக இல்லாதவர்களைத் தவிர்த்து ) அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள பார்வை காணும் செயல்முறைகளின்படி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
அரசு இந்நிலையில் பார்வை . 3 ல் காணும் கடிதத்துடன் பெறப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் , கஸ்பா உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திருமதி . எஸ் . ஜான்சிசந்திரவதினி , என்பவர் சார்பான ஆவணங்களை பரிசீலனை செய்ததில் அன்னார் 06.012009 ல் மன நியமன ஆணை பெற்று 07.012009 அன்று பணியில் சேர்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. எனவே மேற்குறிப்பிட்டவாறு 06.012009 ல் நியமன ஆணை வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியருக்கும் நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு ( 10+2+3 முறையில் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மற்றும் சார்ந்த பாடத்திற்கு இணையானதாக இல்லாதவர்களைத் தவிர்த்து ) அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நா dr முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி 3105.2013 ல் வழங்கப்பட்ட ஆணை பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Post a Comment