2 மணி நேரம், 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்த 5 வயது சிறுமி..! யார்? இவர்?


தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகங் இ முறையினரிடம் புத்தக வாசிப்புப் பழக்கம் தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி, புத்தகங்களைப் படிப்பதில் உலக சாதனை படைத்துள்ளார்.


கியாரா கவுர் என்கிற ஐந்து வயது இந்திய- அமெரிக்கச் சிறுமி, இரண்டு மணி நேரத்தில் முப்பத்தாறு புத்தகங்களைப் படித்து லண்டனின் 'வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்' மற்றும் 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்' ஆகியவற்றில் இடம்பெற்று உலக சாதனை படைத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 13-ந் தேதி இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்தச் சாதனைக்காக சிறுமி கியாராவை 'குழந்தை ப்ராடிஜி' என்று வர்ணித்துள்ளது, உலக சாதனைப் புத்தகம். ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், கியாரா 2016-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடவே, கடந்த பிப்ரவரி 13-ந் தேதி கியாரா நிறைய புத்தகங்களை தொடர்ந்து படித்து, நான்கு வயது, பதினொரு மாதங்கள் மற்றும் இருபத்தி ஏழு நாட்களில் உலக சாதனை படைத்தார். இதை தொடர்ந்து வெளிவந்த அறிக்கையின்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி இளம் வயதிலேயே ஒரு நூலாளர் ஆகியிருக்கிறார். தற்போது அபுதாபியில் பெற்றோரு டன் வசித்துவரும் கியாரா, தன் ஆசிரியர்களில் ஒருவர் நூலகத்தில் தொடர்ந்து புத்தகங்கள் வாசிப்பதைக் கவனித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இவருக்கும் புத்தக வாசிப்பில் ஆர்வம் எழுந்தது.

இவரின் ஆர்வத்தை உணர்ந்த ஆசிரியர், புத்தகங்கள் வாசிக்க கியாராவுக்கு உதவி யாக இருந்திருக்கிறார். கியாரா, “புத்தகம் வாசிப்பது மிகவும் சுவாரஸ்ய மானது. ஒருவர் விரும்பும் இடங்களுக்கு, புத்தகங் களால் மட்டுமே உடனே அழைத்துச் செல்ல முடியும். தொலைபேசிகளில் படிப்பது அல்லது வீடியோவைப் பார்ப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இணை யம் இல்லாவிட்டால் எவரும் எதையும் படிக்கவோ, பார்க்கவோ முடியாது. ஆனால், புத்தக வாசிப்பு அப்படியல்ல” என புத்தக வாசிப்பு குறித்து கூறியுள் ளார். கியாரா, இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறார்.

புத்தக வாசிப்பு மட்டுமே அவரு டைய ஒரே ஆர்வம். வண்ணமயமான படங்கள் மற்றும் பெரிய பெரிய எழுத்துக்களைக்கொண்ட புத்தகங் களை தான் மிகவும் விரும்புவதாகத் தெரிவிக்கும் கியாரா, "புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி யதில் என் தாத்தாவுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. 'சிண்ட்ரெல்லா', 'ஆலிஸ் இன் வொண்டர்லேண்டு', 'லிட்டில் ரெட் ரைடிங் ஹூட்' போன்ற புத்தகங்கள் எனக்குப் பிடித்தமானவை. எதிர்காலத்தில் மருத் துவர் ஆவதே என் கனவு, லட்சியம்" என்றும் கூறுகிறார்.