10 & 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு (05.07.21 to 31.07.21) வரை அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பு செய்யப்படும் நேரம்பற்றி தெரிந்துகொள்வோம்.!

 

 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பு செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .


மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டும் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது .எனினும் 10&12ஆம் வகுப்புபொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக 05.07.21முதல்   ஜூலை 31-ஆம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என  பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழிக் கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

 இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவிலான படங்கள் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. முதல் 20 நிமிடம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்ததாக 3 இருபது நிமிடங்களுக்கு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வெவ்வேறு  பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பு செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் செய்தி வளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.