அரசு இசைப் பள்ளியில் JUNE  28-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்.


அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இசைப்பள்ளி சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் சேலம் தளவாய்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியில் குரலிசை (பாட்டு), தவில், நாதஸ்வரம், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இசைப்பள்ளி செயல்படும்.

13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 28-ந் தேதி பயிற்சிக்கு கட்டணம் இல்லை, சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ.120 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அளிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) தொடகுகிறது. இசைப்பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத்தை இசைப்பள்ளியில் நேரிலோ அல்லது அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது