#BREAKING:+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு.!


 +2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனவைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த இந்த நிலையில் இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் + 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாநில பாடத்திட்டம்  சிபிஎஸ்சி மற்றும் +2தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான்வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில் +2 மாநில பொது தேர்வு ரத்து செய்த மாநிலங்கள் அகமதிப்பீடு மதிப்பெண் முறையை வரும் பத்து நாளைக்குள் உருவாக்க வேண்டும் என்றும் அந்த மதிப்பெண்களில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.