உணவில் தினமும் நெய் சேர்த்துக் கொள்வதால் இத்தனை நன்மைகளா?

 
 ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் உள்ளது நெய்யில் உப்பு லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
 *நெய் உணவில் சேர்த்துக் கொள்வதால் கேன்சர் வைரஸ்களை வைரஸ் நோய்களை தடுக்கிறது.
* நெய் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்
 *சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும் அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன இவர்கள் உணவில் நெய் சேர்த்துக் கொண்டால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும்
* வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும் உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும் போதை பழக்கம் உள்ளவர்களும்   குடல் புண்ணாகிவிடும் இதனால் நாம் வாயிலும் புண்கள் உருவாகி துர்நாற்றம் ஏற்படக்கூடும். எனவே இவர்கள் இரவு உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன் சுரப்பிகள் பலப்படும் மலச்சிக்கல் நீங்கும் நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும் தன்மை கொண்டது. *தீக்காயங்களுக்கு ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது
*காயம் பட்ட இடத்தில நெய்   தொடர்ந்து தடவி வர புண்கள் உடனே குணமாகும்.