மாணவர்களுக்கு வீடுதான் முதல் பள்ளி, ஆன்லைன் கல்வியில் பெற்றோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்.
ஆன்லைன் கல்வி பயிற்றுவிப்பதில் பெற்றோர்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன் சுற்றறிக்கை:
மாணவர்களுக்கு வீடுதான் முதல் பள்ளி என்றும் பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீடுகளில் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரவேண்டும் எனவும் இதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களை கண்காணித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வழி நடத்த வேண்டியது அவசியம் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கல்வித்துறை செயலர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது போன்ற பல தகவல்களை பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்தி வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.
0 Comments
Post a Comment